தென்னையைப் பெற்றால் இளநீர்

தென்னைப் பெற்றால் இளநீர்

தென்னை மரம் கடற்கரை ஓரங்களிலும், மணற்பாங்கான பகுதிகளிலும் ஏராளமாக ஓங்கி செழித்து வளரக்கூடியது.

இது 100 அடி உயரம் வளர்வது மட்டுமின்றி, நூறாண்டுகள் வரையிலும் வளரக் கூடியது. தென்னங்கன்றை நட்ட ஏழாவது ஆண்டு முதல் வருடந்தோறும் பூக்கள் பூக்கத் தோன்றும்.

இந்தியாவில் மக்கள் தேங்காய்க்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறார்கள். ‘கற்பக விருட்சம்’ என தென்னையை அழைக்கிறார்கள்.

Continue reading “தென்னையைப் பெற்றால் இளநீர்”

ஞானம் பிறந்தது – சிறுகதை

ஞானம் பிறந்தது - சிறுகதை

கம்பெனியிலிருந்து டெலிவரிக்காகக் கிளம்பிக் கொண்டிருந்த சமயம் சக ஊழியர் ஒருவர், “சரவணா, உனக்கு போன்” என்றதும், ட்ரை சைக்கிளை அப்படியே நிறுத்திவிட்டு ஓட்டமும் நடையுமாக உள்ளே ஓடினான் சரவணன்.

சரவணனின் பக்கத்து வீட்டிலிருந்து பேசினார்கள். வள்ளிக்கு வலி எடுத்துவிட்டதாகவும் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்ல உடனே கிளம்பி வரும்படியும் சொன்னார்கள்.

சரவணனுக்கு கையும் காலும் ஓடவில்லை. முகத்தில் திகிலும் பரபரப்பும் ஒருசேரத் தோன்றின.

Continue reading “ஞானம் பிறந்தது – சிறுகதை”

கெடு தேதியைத் தெளிவாக அச்சிடுங்கள்

தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவனம் புகழ் பெற்றது. நயமிக்க, தரமிக்க பால், தயிர், நெய், பால்கோவா போன்ற சுவை மிக்க இதர பொருட்களையும் இந்நிறுவனம் தயாரித்து வழங்கி வருவது அனைவரும் அறிந்தது தான்.

Continue reading “கெடு தேதியைத் தெளிவாக அச்சிடுங்கள்”

யாருக்கும் வெட்கமில்லை – சிறுகதை

யாருக்கும் வெட்கமில்லை

“கங்கிராட்ஸ் மிஸ்டர் ரவி! உங்க மனைவி கன்சீவாயிருக்காங்க!” – லேடி டாக்டர் சொன்ன செய்தியைக் கேட்டு சந்தோஷக் கடலில் மூழ்கிய ரவி, டாக்டர் ரூமை விட்டு வெளியே வந்ததும் மீனா கூறியதைக் கேட்டு அதிர்ந்தான்.

தலையில் இடி விழுதாற்போல் ஓர் உணர்வு. பதற்றத்துடன் “என்ன மீனா, என்ன சொல்றே?” எனக் கேட்டான்.

“நிஜமாத்தாங்க சொல்றேன். இப்போ இது தேவையா? கல்யாணமாகி முழுசா மூணு மாசங்கூட ஆகலே. எனக்கு வெட்கமா இருக்கு. கொஞ்சநாள் போனா ஆபிசுல எல்லோரும் கேலியாப் பேசுவாங்க. அதனால்தான் சொல்றேன்” என்றாள் மீனா.

Continue reading “யாருக்கும் வெட்கமில்லை – சிறுகதை”

காத்திருக்கும் சுகம் – சிறுகதை

காத்திருக்கும் சுகம்

அன்று அந்த மேனிலைப் பள்ளி காலை வேளையிலேயே அமர்க்களப்பட்டது.

ப்ளஸ் ஒன் மாணவர்கள், ப்ளஸ் டூ முடிந்து பள்ளியை விட்டுச் செல்லும் மாணவர்களுக்காக பிரிவு உபசார விழா ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார்கள்.

ப்ளஸ் டூ தேர்வுகள் துவங்க இன்னும் ஓரிரு தினங்களே இருந்தன.

“அடுத்து என்ன செய்வதாய் உத்தேசம்?” என மாணவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் கேட்டுக் கொண்டிருந்தனர்.

Continue reading “காத்திருக்கும் சுகம் – சிறுகதை”