அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை

நூலகம்

அறிவினை விரிவு செய் என்பது, பள்ளி கல்லூரி மாணவர்கள் அறிவினை வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கும் ஒரு நல்ல கதை.

அன்று ஞாயிற்று கிழமை.

பள்ளியின் மைதானத்தில் மாணவர்கள் ஒன்றுகூடி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த நேரம் அங்கே கதிரவன் வந்தான்.

“என்னடா கதிரவா, இப்போதெல்லாம் சனிக்கிழமையில விளையாட வரமாட்டுற? ஏன்டா பிஸியா?” என்றான் மோகன். Continue reading “அறிவினை விரிவு செய் – சிறுவர் கதை”

கல்வி உலகம் எதனை நோக்கி செல்ல வேண்டும்?

கல்வி உலகம் எதனை நோக்கி செல்ல வேண்டும்

இன்று அறிவியல் என்ற பெயரில் வரலாறு, இலக்கியம், தத்துவம் ஆகிய துறைகள் புறக்கணிக்கப்படுகின்றன.

ஆதலால், இன்றைய மனிதன் நாகரீகத்தை இழந்து, காவல் நிலையங்களின் வளர்ச்சிக்கும் சிறைக் கூடங்களை நிரப்பவுமே உரியவர்களாகி விட்டார்கள்.

கடந்த சில ஆண்டுகளில் காவல் நிலையங்களின் வளர்ச்சியே குற்றங்களின் வளர்ச்சிக்கு நிரூபணமாகிறது.

ஆணும், பெண்ணும் இணைந்து வாழவேண்டியது சமூக அமைப்பு. இச்சமூகத்தில் இன்றைய கல்வித்துறையிலிருந்து காவல்துறை வரையில் ஆண், பெண் பிரிக்கப்படுகின்றனர்.

ஏன் இந்த அவலம்? Continue reading “கல்வி உலகம் எதனை நோக்கி செல்ல வேண்டும்?”

எழுத்தாளர் சுஜாதா – ஓர் அறிமுகம்

எழுத்தாளர் சுஜாதா

எழுத்தாளர் சுஜாதா  புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். 

அவர் ஒரு பொறியியல் வல்லுநர். அறிவியலைத் தமிழ் இலக்கியத்தில் இடம் பெறச் செய்தது அவரின் முக்கியமான பங்களிப்பாகும்.

அவரின் எழுத்துக்கள் அனைவரும் படித்து புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் உள்ளன.

எழுத்தாளர் சுஜாதா அவர்களின் இயற்பெயர் ரங்கராஜன்வர் தன் மனைவியின் பெயரான சுஜாதாஎன்னும் புனைப்பெயரில் தன் படைப்புகளை எழுதி வந்தார்.

நாம் இக்கட்டுரையில் சுஜாதாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவருடைய படைப்புகளுள் சிலவற்றைப் பற்றி பார்ப்போம். Continue reading “எழுத்தாளர் சுஜாதா – ஓர் அறிமுகம்”

கல்வி உலகம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது?

கல்வி உலகம் எங்கு போய் கொண்டிருக்கிறது

கல்வி உலகம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது? முடிவு செய்யுங்கள்! என்ற இக்கட்டுரை, எங்கே போகிறோம் என்னும் நூலில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதிய சுதந்திர தினவிழாச் சிந்தனைகள் என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ளது.

உயிர்த்தொகுதி பரிணாம வளர்ச்சியில் புல், புழு, விலங்கு… என்று வளர்ந்து கடைசியாக, ஐந்து அறிவினாலாகிய விலங்கினின்றும் ஆறறிவுடைய மனிதன் பரிணமித்தான்.

மனிதன் மிருகமும் அல்லன், முழு மனிதனுமல்லன்.

Continue reading “கல்வி உலகம் எங்கு போய்க் கொண்டிருக்கிறது?”

இளைய பாரதமே எழுந்திரு!

இளைய பாரதமே எழுந்திரு!

இளைய பாரதமே எழுந்திரு என்ற இக்கட்டுரை, எங்கே போகிறோம் என்னும் நூலில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் எழுதியது.

இன்று நம்முடைய நாடு ஜனநாயக நாடு; மக்களாட்சி முறை நடைபெறுகின்ற நாடு.

ஜனநாயகம் என்பது ஒரு அரசியல் கோட்பாடு மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கை முறை. Continue reading “இளைய பாரதமே எழுந்திரு!”