குறுநகை பூக்கள்

சுவரொட்டியில் இருந்த புல்வெளியை
கிழித்து மேய்ந்தது மாநகர மாடு

மின் கம்பங்களில் கூடமைத்துக் கொள்கின்றன
நகரத்து நாகரீக காக்கைகள்

Continue reading “குறுநகை பூக்கள்”

சோதி வடிவான ஆதிமூலம் ..!!

சூலத்துடன் சிவபெருமான்

ஆலகண்டனே ஆனந்த கூத்தா அருள் தர வந்திடு நீ – திரு

நீலகண்டனே நிலவுச் சடையனே நிம்மதி தந்திடு நீ!

நாதன்என்பவன் நயனைச்சுடரோன் நலம்தர வந்திடுநீ – நல்

வேதம் தந்தவன் வெண்பனி மலையோன் வேண்டுதல் தருபவன் நீ !

Continue reading “சோதி வடிவான ஆதிமூலம் ..!!”

கவலையற்ற கவலை

வெண்சுருட்டு வரைந்த ஓவிய வானில்
கவலைப் பறவைகள் பறந்து போவதாய்
கண்மூடி மெய்மறந்து ரசித்து கொண்டிருக்கிறது
மனம் அதன் சிறகுகளை …

Continue reading “கவலையற்ற கவலை”

இன்னும் விளங்க வில்லங்க – கிராமியப் பாடல்

தமிழ்ப் பெண்

ஏ மச்சான் எனக்கு மட்டும் இப்படி நடக்குது
நான் என்ன பாவம் செஞ்சு புட்டேன் நெஞ்சம் வதைக்குது
பூ வச்சேன் புழுதி மண்ணில் விழுந்து போச்சுது
சாந்து பொட்டும் கூட சடுதியிலே கரையலாச்சுது

Continue reading “இன்னும் விளங்க வில்லங்க – கிராமியப் பாடல்”

தமிழர்களின் மாண்பு சொல்லும் பொங்கல்…

ஜல்லிக்கட்டு என்பது ஒரு விளையாட்டு

உழவனுக்கு உயர்வு தரும் நாளாய் – தமிழ்
உள்ளம் களிக்க வந்ததொரு பாவாய் – அந்த
உழவனுக்கும் நன்றி சொல்லி
உழுததற்கும் நன்றி சொல்லும்
பொங்கல் – தைப் – பொங்கல்!

Continue reading “தமிழர்களின் மாண்பு சொல்லும் பொங்கல்…”