காத்திருப்பின் அர்த்தங்கள்! – கவிஞர் கவியரசன்

முன்பொரு காலத்தில்
என்றெல்லாம் சொல்லக் கதைகளில்லை…
சில நாட்களுக்கு முன்னரே
சந்தித்துக் கொண்டோம் நீயும் நானும்…

Continue reading “காத்திருப்பின் அர்த்தங்கள்! – கவிஞர் கவியரசன்”

எனையும் தீண்டுமோ தென்றல்? – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்

குளித்துவிட்டு ஹாலுக்கு வந்து சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள் செல்வி. மணி எட்டு என்பதைக் காட்டியது கடிகாரம்.

“அட! மணி எட்டாயிட்டே சீக்கிரம் கெளம்பணும். கொஞ்சம் லேட்டானாலும் சிடுமூஞ்சி சூப்பர்வைசர் சிங்காரம் ‘காள்காள்’னு கத்தும்” என்று வாய்விட்டுப் புலம்பியவாறே தன்னை சுடிதாருக்குள் நுழைத்துக் கொண்டாள் செல்வி.

நீலநிற பாராசூட் பிளாஸ்டிக் குப்பியிலிருந்து தேங்காய் எண்ணையை இடது கையில் கொஞ்சமாய்ச் சாய்த்து விட்டு எண்ணைக் குப்பியை எடுத்த இடத்தில் வைத்து விட்டு இருகைகளாலும் எண்ணையைப் ‘பரபர’வென்று தேய்த்து தலையில் தடவிக் கொண்டாள்.

Continue reading “எனையும் தீண்டுமோ தென்றல்? – காஞ்சி தங்கமணி சுவாமிநாதன்”

எங்கேயோ கேட்ட பாடல் – திசை சங்கர்

வாழைகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவதற்காகச் சென்ற சுப்புவின் வேலையை மேகங்கள் செய்து கொண்டிருந்தன.

மெல்ல விழும் தூறலில் சைக்கிளை வேகமாக ஓட்டியபடி வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்.

அப்பொழுது லாரி ஒன்று பாடலை ஒலிக்கவிட்டபடி சென்று கொண்டிருந்தது. செல்லும் வேகத்தில் சில வரிகள் மட்டும் காதில் கேட்டன.

Continue reading “எங்கேயோ கேட்ட பாடல் – திசை சங்கர்”