மஞ்சள் கரிசாலங்கண்ணி கிடைக்குமா?

மஞ்சள் கரிசலாங்கண்ணி

வணக்கம்!

இதை என்னுடைய முதல் எழுத்து, முதல் பதிவு அல்லது முதல் கட்டுரை என‌ எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.

எப்பொழுதும் போல் இணைய உலா வரும்போது, தங்க‌ள் இனிது இணையத்தை பார்க்க இறைவன் என்னைப் பணித்தான்.

அதில் எப்படி எழுதுவது எதை எழுதுவது என்று எனக்காகவே முதலில் அந்த பக்கத்தை இறைவன் காண்பித்தான்.

என் முதல் எழுத்து வெளியிடுவதற்கு தகுதியுண்டு என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

என்னைப் பொறுத்த வரை கீரைகளின் ராஜா   மஞ்சள் கரிசலாங்கண்ணி.

நான் கிராமத்தில் என் தாயுடன் வயல் ஓரங்களிலும் ஏரிகளிலும் மற்றும் திறந்த வெளிகளிலும் சுற்றித் திரிந்தவன். அது வெறும் சுற்றல் அல்ல. மிகப் பெரிய கல்வி என்பதை இப்போது உணர்கிறேன்.

ஏன் தெரியுமா? Continue reading “மஞ்சள் கரிசாலங்கண்ணி கிடைக்குமா?”

முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி?

சுவையான முடக்கத்தான் சூப்

முடக்கத்தான் கீரை சூப் கை, கால், உடல் வலிகளைப் போக்கும். நரம்புகளுக்குப் புத்துணர்வு கொடுக்கும்.

உடலில் உண்டாகும்முடங்கங்களை (வலிகளை) போக்குவதால் இக்கீரை முடக்கு அற்றான் என்று அழைக்கப்பட்டு தற்போது முடக்கத்தான் என்று மருவியுள்ளது.

முடக்கத்தான் கீரையைக் கொண்டு சூப், தோசை, சட்னி, துவையல் உள்ளிட்ட உணவு வகைகள் தயார் செய்யப்படுகின்றன.

இந்த பதிவில் சுவையான எளிய வகையில் முடக்கத்தான் சூப் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “முடக்கத்தான் கீரை சூப் செய்வது எப்படி?”

பிரண்டை துவையல் செய்வது எப்படி?

சுவையான பிரண்டை துவையல்

பிரண்டை துவையல் அதிக சத்துள்ள ஒரு உணவு ஆகும்.

பிரண்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமான மூலிகை ஆகும். இதனை பயன்படுத்தி சூப், துவையல், சட்னி, வத்தல் செய்யலாம்.

பிரண்டைச் சாறு உடலில் பட்டால் அரிக்கும். ஆதலால் இதனுடைய தோலைச் நீக்கும் போது கையில் நல்ல எண்ணெயைத் தடவிக் கொண்டு நீக்கினால் அரிப்பினைத் தடுக்கலாம்.

எலும்புகளுக்கு வலுவூட்டி உடலினை உறுதிப்படுத்துவதால் இதற்கு வஜ்ரவல்லி என்ற சிறப்பு பெயர் உண்டு. Continue reading “பிரண்டை துவையல் செய்வது எப்படி?”

காய்ச்சல் கஞ்சி செய்வது எப்படி?

சுவையான காய்ச்சல் கஞ்சி

காய்ச்சல் கஞ்சி என்பது அரிசியை வைத்து செய்யப்படும் கஞ்சி ஆகும்.

காய்ச்சல் வந்தால் செரிமானப் பிரச்சினை ஏற்படும்.

காய்ச்சல் நேரத்தில் இட்லி, இடியாப்பம், கஞ்சி உண்டால் செரிமானம் எளிதாவதுடன் காய்ச்சலின் தீவிரமும் குறையும்.

சாதாரணமாக கஞ்சியை மாதம் ஒருமுறை தயார் செய்து உண்டால், செரிமான உறுப்புகளுக்கு ஓய்வுடன் கூடிய ஆரோக்கியம் கிடைக்கும்.

காய்ச்சல் கஞ்சியின் செய்முறை பற்றிப் பார்ப்போம். Continue reading “காய்ச்சல் கஞ்சி செய்வது எப்படி?”

வாழ்வு செழிக்க ஆரோக்கிய குறிப்புகள்

வாழ்வு செழிக்க ஆரோக்கிய குறிப்புகள்

நம் வாழ்வு செழிக்க கடைப்பிடிக்க வேண்டிய‌ ஆரோக்கிய குறிப்புகள் சில இங்கே உள்ளன.

இன்றைக்கு இருக்கும் பரபரப்பான சூழ்நிலையில் ஆரோக்கியமாக‌ வாழ அவை உதவும். Continue reading “வாழ்வு செழிக்க ஆரோக்கிய குறிப்புகள்”