தூக்குமரம் ‍குறும்படம் விமர்சனம்

தூக்குமரம்

தூக்குமரம் ‍குறும்படம் விமர்சனம் இந்த பதிவில் பார்ப்போம்.

தூக்குமரம் ஒரு சிறந்த குறும்படம்.

முதல் காட்சி

வாழ்வில் விரக்தி அடைந்து இறக்கும் எண்ணமுடன், தூக்குப்பட்டி என்னும் ஊரிலுள்ள தூக்குமரத்தில் தூக்குப் போட்டு இறக்க ஒருவர் வருகிறார்.

பெட்டிக்கடைக்காரர் ஒருவர், வந்தவரின் மனதைப் புரிந்து கொண்டு, தூக்குப் போட்டுக் கொள்ளக் கயிறை இலவசமாகத் தருகிறார். இதன் மூலம் அவரின் கடை பிரபலமாகி வியாபாரம் அதிகரிக்கும் எனக் கூறுகின்றார்.

Continue reading “தூக்குமரம் ‍குறும்படம் விமர்சனம்”

உறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை

உறவுகளின் பாசக்கயிறுகள்

உறவுகள் உதறித் தள்ளிய ஒரு துளியே!
உயிர்வலியால் தினம்துடிக்கும் மைவிழியே!
மழைத்துளியால் துளிர்விட்டு
மண்முழுதும் படர்வதற்கு

மகிழ்ச்சியோடு புறப்பட்ட இளந்தளிரே
உன் மழலைத் தளிரின் மேல்
வெந்நீரை ஊற்றும் வெந்தனல் உறவுகள்!
அதைக் கண்டு மடியாதே!

Continue reading “உறவுகளின் பாசக்கயிறுகள் – கவிதை”

விடியல் வெகு தொலைவில் இல்லை

விடியல் வெகு தொலைவில் இல்லை

இருட்டறை ஜன்னலின் வழியே

விடியலைத் தேடும் பெண்ணே!

ஒற்றை மின்னலின் வேகம்

கண்டு அஞ்சாதே!

கள்ளிப் பாலின் ருசி அறிந்த உன் தேகம்

காலனைக் காலில் நசுக்காதா?

செந்நெல்லையும் செரித்த உன்னுடல்

வெந்நெருப்பை உமிழாதா?

Continue reading “விடியல் வெகு தொலைவில் இல்லை”