நட்சத்திர நெல்லிக்காய் அருநெல்லி

Arinelikkay

அருநெல்லி என்றவுடன் எல்லோருக்கும் பொதுவாக வாயில் நீர் ஊறும். வாயில் நீர் ஊறுவதற்கு அருநெல்லிக்காயின் புளிப்பு சுவை நம் நினைவிற்கு வருவதே காரணம் ஆகும்.

பொதுவாக நாம் எல்லோரும் இக்காயினை உப்பும், மிளகாய்பொடியும் வைத்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருப்போம். நொறுக்குத் தீனியாகப் பயன்படுத்தப்படும் இக்காய் சத்து நிறைந்ததும் கூட. Continue reading “நட்சத்திர நெல்லிக்காய் அருநெல்லி”

துருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்

தூந்திரா

தூந்திரா என்ற சொல்லுக்கு மரம் இல்லா நிலம் என்பது பொருளாகும். தூந்திராவானது புவியில் காணப்படும் முக்கிய நில வாழிடம் ஆகும். இவ்வாழிடம் புவியில் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

இது இப்புவியில் தோன்றிய மிகஇளமையான வாழிடம் ஆகும். இவ்வாழிடம் சுமார் 10000 ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்படுகிறது. Continue reading “துருவ இரவு தூந்திரா பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்”

தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்

தடாதகை பிராட்டியார் மீனாட்சி அம்மன்

தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம் திருவிளையாடல் புராணத்தின் மதுரைக் காண்டத்தின் நான்காவது படலம் ஆகும்.

இப்படலம் அங்கயற்கண்ணி அம்மையான மீனாட்சியின் அவதாரம் மற்றும் அவர் மதுரையை ஆட்சி செய்த விதம் பற்றி விளக்கிறது. Continue reading “தடாதகை பிராட்டியார் திருஅவதாரப் படலம்”

இனிப்பு வேப்பிலை கறிவேப்பிலை

கறிவேப்பிலை

கறிவேப்பிலை இல்லாத சமையலை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. இது வாசனைக்காவும், அதில் உள்ள சத்துக்களுக்காகவும் உணவுப் பொருட்களில் சேர்க்கப்படுகிறது.

இதனுடைய தனிப்பட்ட மணம் மற்றும் சுவையானது உணவுப் பொருட்களுக்கு அதிக ருசியினைக் கொடுக்கிறது. Continue reading “இனிப்பு வேப்பிலை கறிவேப்பிலை”

இலையுதிர் காடுகள்

ஆண்டின் குறிப்பிட்ட பருவத்தில் இலைகளை உதிர்த்துவிடும் காடுகள் இலையுதிர் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன.

இக்காடுகளில் பொதுவாக கோடை காலம், மழை காலம், குளிர் காலம், இலையுதிர் காலம், வசந்த காலம் எனப் பலவித‌  பருவகாலங்கள் காணப்படுகின்றன. Continue reading “இலையுதிர் காடுகள்”