அயனிமம் கிளர்வுற்ற நீர்- நீருடன் ஓர் உரையாடல் -18

அயனிமம் கிளர்வுற்ற நீர்

தோட்டத்தில் இருந்த செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி சில நாட்கள் ஆகிவிட்டன. வீட்டின் பின்புறம் இருந்த தோட்டத்திற்கு விரைந்து சென்றேன். நல்ல வேளையாக எந்த தாவரமும் வாடிப் போகவில்லை.

மனம் அமைதியடைந்தது.

தண்ணீர் குழாயில் பிளாஸ்டிக் நெடுங்குழாயை மாட்டினேன். தண்ணீர் குழாயைத் திறக்க, நீர் பிளாஸ்டிக் நெடுங்குழாய் வழியே பீறிட்டு வந்தது.

அதில் வந்த நீரை முதலில் தொட்டிகளில் இருந்த பூச்செடிகளுக்கு பாய்ச்சினேன். அவை அசைந்தன. ‘நீர் கிடைத்ததால் அவை மகிழ்ந்து சிரித்தனவோ?’ என்று மனதில் தோன்றியது.

Continue reading “அயனிமம் கிளர்வுற்ற நீர்- நீருடன் ஓர் உரையாடல் -18”

நீரின் சுவை – நீருடன் ஓர் உரையாடல் – 17

நீரின் சுவை - நீருடன் ஓர் உரையாடல் - 17

மூன்று நாட்களுக்கு முன்பு, மாமாவும் அக்காவும் வீட்டிற்கு வந்து சென்றனர். கூடவே, ஒரு பெரிய பை நிறைய மாங்காய்களையும் கொண்டு வந்திருந்தனர். அவை எல்லாம் அவர்களது வீட்டில் இருந்த மாங்காய் மரத்தில் காய்த்தவை.

“வீணா போயிடப் போகுது. ஊறுகாயாவது செய்யுங்க” என்று அப்பா அந்த மாங்காய்கள் குறித்து அவ்வப்பொழுது சொல்லிக் கொண்டிருந்தார்.

எனக்கோ மாங்காய் ஊறுகாய் செய்வதில் அந்த அளவு ஆர்வமில்லை. ‘அவ்வளவு மாங்காய்களையும் என்ன செய்யலாம்’ என்று யோசித்தேன்.

அப்பொழுது ஒருமுறை ‘உலர் இனிப்பு மாங்காய் துண்டுகளை’ நண்பன் எனக்கு தந்தது நினைவிற்கு வந்தது. ‘சரி அதையே செய்திடலாம்’ என்று முடிவு செய்தேன்.

Continue reading “நீரின் சுவை – நீருடன் ஓர் உரையாடல் – 17”

கடல் நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 16

கடல் நீர்

பல ஆண்டுகளுக்கு பிறகு, இன்று தான் கடற்கரைக்கு வந்தேன். மணற்பரப்பில் அமர்ந்து கொண்டு கடலின் அழகை இரசித்துக் கொண்டிருந்தேன்.

கடற்காற்று ஓயாது வீசிக் கொண்டிருந்ததால், மதிய வெயிலின் தாக்கத்தைச் சற்றும் உணரவில்லை.

தூரத்தில் கடலில் தோன்றிய சிறிய அலை கடற்கரையை நெருங்க நெருங்க பெரிதானது. மாற்றாக, ஆர்ப்பரித்து வந்த பெரிய அலை, கடற்கரையை தொடும் பொழுது சிறிதானது.

அடுத்தடுத்து வந்த அலைகளின் ஓயாத விளையாட்டைக் கண்டு வியந்தேன்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, எழுந்து சற்று முன்னோக்கி நடந்து சென்று கரை ஒட்டில் நின்றேன். அலைகள் வந்து எனது கால்களை நனைத்தன. அப்படியே சில நிமிடங்கள் கடந்தன.

“சந்தோஷமா…?” என்ற குரல் கேட்டது.

“யாரு….?” என்று எண்ணிக் கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தேன்.

Continue reading “கடல் நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 16”

மென்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 15

மென்னீர்

வீட்டில் ஒவ்வொரு பகுதியாக சுத்தம் செய்துகொண்டு வந்தேன். அப்பொழுது எனது அறையின் பரணைச் சுத்தம் செய்ய முடுவு செய்தேன்.

ஒரு உயர்ந்த நாற்காலியின் மீது ஏறி நின்றுப் பார்த்தேன்.

பரணையில் அட்டைப் பெட்டிகள், சாக்கு மூட்டைகள் என பலப் பொருட்கள் இருந்தன. பயங்கர ஒட்டடை. தூசிப் படலம் அடர்த்தியாக இருந்தது.

“இதுல வேல செஞ்சா உடனே அலர்ஜி வந்திடும்” என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்.

Continue reading “மென்னீர் – நீருடன் ஓர் உரையாடல் – 15”

கனிம நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 14

கனிம நீர்

வந்த வேலை முடிந்தது. அந்த அலுவலகத்திலிருந்து புறப்பட்டு பேருந்து நிறுத்துமிடம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

அப்பொழுது மணி மதியம் 12-யை கடந்திருந்தது. வெயிலின் தாக்கமோ அதிகரித்திருந்தது.

வியர்வை ஊற்றெடுத்து எனது முகத்தை நனைத்தது. கைகுட்டையால் கழுத்திலும் முகத்திலும் சொட்டிக் கொண்டிருந்த வியர்வை துளிகளை நன்றாக துடைத்தேன். கைகுட்டை ஈரமானது.

Continue reading “கனிம நீர் – நீருடன் ஓர் உரையாடல் – 14”