வைகாசி விசாகம்

வைகாசி விசாகம்

வைகாசி விசாகம் ஆண்டுதோறும் இந்துக்களால் வைகாசி மாதம் பௌர்ணமியை ஒட்டி வரும் விசாக நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இது வைகாசி விசாகப் பெருவிழா என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருநாளே முருகப் பெருமானின் அவதார நாளாகக் கருதப்படுகிறது. Continue reading “வைகாசி விசாகம்”

சோக்கு சொக்கத்தா

சோக்கு சொக்கத்தா

விருதுநகர் மாவட்டம் முகவூர் மாரியம்மன் கோவிலில் பங்குனிப் பொங்கலுக்கு சிறுவர்கள் வேசம் போட்டு வீடு வீடாகச் சென்று காணிக்கை வாங்கி கோவிலில் செலுத்துவார்கள். அப்போது அவர்கள் பாடும் பாட்டு இது. Continue reading “சோக்கு சொக்கத்தா”

சித்ரா பவுர்ணமி

முழு நிலா

சித்ரா பவுர்ணமி இந்துக்களால் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் சித்திரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வின் போது தர்ம தேவதையான எமதர்மராஜனின், உதவியாளரான (கணக்கு பிள்ளை) சித்திர குப்தனுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. Continue reading “சித்ரா பவுர்ணமி”

சித்திரைத் திருவிழா

மதுரை சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அமாவாசையை அடுத்த இரண்டாம் நாள் முதல் மொத்தம் பன்னிரெண்டு நாள்கள் மதுரை மாநகரில் நடைபெறுகிறது. இவ்விழாவில் மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குதல் என இரண்டு முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. Continue reading “சித்திரைத் திருவிழா”

திருவிழா கொண்டாட வேண்டும் – ஏன்?

திருவிழா

திருவிழா என்றாலே கொண்டாட்டம் தான். திருவிழா என்பது சில குறிப்பிட்ட நாள்களில் மக்கள் ஒன்று கூடி கொண்டாடுவது ஆகும். இதனை உற்சவம், ஊர்வலம் என்றும் பொருள் கொள்ளலாம்.

திருவிழாவின் முக்கிய கோட்பாடே ஒன்று கூடுதல், கூடி உண்ணுதல், கொண்டாடுதல், மகிழ்ச்சியைப் பகிர்தல் ஆகியவை ஆகும்.

பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை திருவிழா என்றவுடன் ஆர்வம் மற்றும் உற்சாகமடைந்து அதனை வரவேற்க தயாராகிவிடுகின்றனர்.

திருவிழாக்கள் ஓர் இடத்தில் உள்ள மக்களின் நாகரிகம், கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. Continue reading “திருவிழா கொண்டாட வேண்டும் – ஏன்?”