கடப்பா செய்வது எப்படி?

சுவையான கடப்பா

கடப்பா அல்லது கடப்பா சாம்பார் அருமையான குழம்பு ஆகும். சிறுபருப்பு சேர்த்து செய்யப்படுவதால் இதனுடைய சுவை மிகவும் அபாரமாக இருக்கும்.

இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்ட டிபன் வகைகளுக்கு இது மிகவும் பொருத்தம். சாம்பார், சட்னி, குருமா ஆகியவற்றிற்குப் பதிலாக இதனை செய்து அசத்தலாம்.

தஞ்சை, கும்பகோணம் உள்ளிட்ட இடங்களில் இது மிகவும் பிரபலம்.

Continue reading “கடப்பா செய்வது எப்படி?”

சீரக சாதம் / சீரா ரைஸ் செய்வது எப்படி?

சீரக சாதம் / சீரா ரைஸ்

சீரக சாதம் எளிதில் செய்யக்கூடிய எளிமையான கலவை சாதம் ஆகும். இதனை பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுத்து அனுப்பலாம்.

சீரகம் உடலின் வெப்பத்தை சீராக வைக்க உதவுகிறது. அத்தோடு செரிமானமும் நன்கு நடைபெற உதவுகிறது. எனவே இச்சாதத்தை அடிக்கடி செய்து உண்ணலாம்.

சீரக சாதம் தயார் செய்ய சாதாரண சாப்பாட்டு அரிசியையோ, சம்பா பிரியாணி அரிசியையோ அல்லது பாசுமதி அரிசியையோ பயன்படுத்தலாம்.

நான் சம்பா பிரியாணி அரிசியைப் பயன்படுத்தி சீரா ரைஸ் செய்துள்ளேன்.

Continue reading “சீரக சாதம் / சீரா ரைஸ் செய்வது எப்படி?”

கத்தரிக்காய் கிரேவி செய்வது எப்படி?

கத்தரிக்காய் கிரேவி பிரியாணி, சப்பாத்தி, பூரி, இட்லி மற்றும் தோசை ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமான தொட்டுக்கறி ஆகும்.

கத்தரிக்காயை விரும்பாதவர்கள்கூட இக்கிரேவியை விரும்பி உண்பர். இதனுடைய அபார சுவையே அதற்குக் காரணம்.
Continue reading “கத்தரிக்காய் கிரேவி செய்வது எப்படி?”

முருங்கை கீரை கூட்டு செய்வது எப்படி?

முருங்கை கீரை கூட்டு

முருங்கை கீரை கூட்டு ஆரோக்கியமான சத்தான கூட்டு ஆகும்.

முருங்கை கீரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய முக்கியமான உணவுப் பொருள்.

இக்கீரையைக் கொண்டு பொரியல், சூப், கேழ்வரகு அடை உள்ளிட்ட உணவு வகைகளைச் செய்யலாம்.

பருப்பையும், கீரையையும் கொண்டு இது செய்யப்படுவதால், உடலுக்கு அவசியமான சத்துக்களான புரதம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவற்றைக் கொண்டு ஆரோக்கியத்தை இது வழங்குகிறது.

மேலும் பருப்பு சேர்க்கப்படுவதால் இதனுடைய சுவையும் அபாரம்.

Continue reading “முருங்கை கீரை கூட்டு செய்வது எப்படி?”

பிரண்டைப் பொடி செய்வது எப்படி?

பிரண்டைப் பொடி

பிரண்டைப் பொடி சுவையான ஆரோக்கியமான பொடி ஆகும். பிரண்டை மூலிகை வகையைச் சார்ந்தது. பிரண்டையைப் பயன்படுத்தி துவையல், சூப் ஆகியவற்றைச் செய்து ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். தற்போது பிரண்டை கொண்டு பொடி செய்து பதிவிடுகிறேன்.

பொதுவாக மழை பெய்ததும் பிரண்டை தளிர் விடும். இவ்விளம் பிரண்டைத் தண்டையே நாம் சமையலுக்குப் பயன்படுத்துகிறோம். தளிர் விட்ட சிறிது நாட்களில் பிரண்டைத் தண்டு முற்றி விடும். அதனை நாம் உபயோகிக்க முடியாது.

ஆதால் இளம் பிரண்டைத் தண்டு கிடைக்கும் காலங்களில், அதனைக் கொண்டு பிரண்டைப் பொடி தயார் செய்து, காற்றுப்புகாத டப்பாக்களில் அடைத்து வைத்துக் கொண்டால் நாம் அதிக நாட்களுக்கு பிரண்டையை பொடி வடிவில் உபயோகிக்கலாம்.

இனி சுவையான பிரண்டைப் பொடி செய்யும் முறை பற்றிப் பார்ப்போம்.

Continue reading “பிரண்டைப் பொடி செய்வது எப்படி?”