திருப்பாவை என்னும் பாவை பாட்டு

திருப்பாவை பாவை நோன்பின் போது பாடப்படும் பாடல்கள் நிறைந்தது; ஆதலால் பாவை பாட்டு என்று அழைக்கப்படுகிறது. இது சங்கத் தமிழ் மாலை என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது.

திருப்பாவை பெரியாழ்வாரின் செல்வப் புதல்வியும், பன்னிரு ஆழ்வார்களில் பெண் ஆழ்வாரான ஆண்டாள் பாடிய பாடல்கள் ஆகும். திருப்பாவையில் மொத்தம் முப்பது பாடல்கள் உள்ளன.

இவை மார்கழி மாதத்தின் முப்பது நாட்களிலும் பாவை நோன்பு நோற்பவர்களாலும், திருமால் அடியவர்களாலும் பாடப்படுகின்றன.

பாவை நோன்பின் போது மார்கழி மாதத்தில், பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி இறைவனை துதித்து வழிபாடு நடத்துவர்.

பாவை நோன்பினை பிண்ணனியாகக் கொண்டு பாடப்பட்டவை திருப்பாவைப் பாடல்கள்.

திருவில்லிபுத்தூரை ஆயர்பாடியாகவும், திருவில்லிபுத்தூரில் வசித்த பெண்களையும் தன்னையும் ஆயர்குலப் பெண்களாகவும், திருவில்லிபுத்தூர் கோவிலை நந்தகோபனின் அரண்மனையாகவும், அக்கோவிலில் குடிகொண்டிருக்கும் வடபெருங்கோவிலுடையானை ஆயர்பாடி கண்ணனாகவும் பாவித்து, திருப்பாவையில் ஆண்டாள் பாடியுள்ளார்.

திருப்பாவையில் பாவை நோன்பின் பயனாக பெண்கள் பறையைப் பெறலாம் என்று ஆண்டாள் பாடுகிறார். பறை என்பது பரிசு ஆகும்.

இறைவன் பாவை நோன்பின் பரிசினைப் பெறுவதற்கு உரிய வழியாகவும், பரிசினை வழங்கக் கூடியவனாகவும், பெறுவதற்கரிய பரிசாகவும் இருக்கிறான் என்று திருப்பாவை மூலம் நமக்கு வழிகாட்டுகிறார் ஆண்டாள்.

ஆண்டாள் பாவைநோன்பின்போது எல்லா பெண்களும் எளிதான வகையில் கடைப்பிடிக்கக் கூடிய விதிமுறைகளையே, திருப்பாவையின் இரண்டாவது பாசுரத்தில் கூறியுள்ளார்.

பெய்யும் மழையை இறைவனான திருமாலுடன் ஒப்பிட்டு, அந்த மழையானது எப்படி பெய்ய வேண்டும் என்பதை கூறும் ஆண்டாளின் அறிவியல் அறிவு, திருப்பாவையின் மூன்றாவது பாசுரத்தின் மூலம் வெளிப்படுகிறது.

திருமாலின் அன்பையும், அருளையும் பெற்றுத் தரும் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 473 முதல் 503 வரை உள்ள பாடல்களாக திருப்பாவைப் பாடல்கள் உள்ளன.

மார்கழி மாதத்தின் முப்பது நாட்களிலும் திருமால் கோவில்களில் சுப்பர பாதத்திற்கு பதிலாக, திருப்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன.

தாய்லாந்தில் மன்னர் முடிசூடுதலின்போது திருப்பாவை, திருவெம்பாவை பாடல்கள் பாடப்படுகின்றன.

திருப்பாவை இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா என்னும் பாவகையைச் சார்ந்தது.

வ.முனீஸ்வரன்

திருப்பாவை பாடல்கள்

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி

ஆழிமழைக் கண்ணா ஒன்று நீ கைகரவேல்

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

கீசுகீசென்று எங்கும் ஆனைச்சாத்தான் கலந்து

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மானாய்

கற்றுக் கறவை கணங்கள் பலகறந்து

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி

புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை

உங்கள் புழங்கடைத் தோட்டத்து வாவியுள்

எல்லே இளங்கிளியே இன்னம் உறங்குதியோ

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்

உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலிய‌ன்

குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப

அங்கண்மா ஞாலத்து அரசர் அபிமான

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி

ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்

மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவான்

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உன்தன்னைப்

கறவைகள் பின்சென்று கானகம் சேர்ந்து உண்போம்

சிற்றஞ் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை

 

திருமணப்பேற்றினை அருளும் வாரணம் ஆயிரம் பதிகம்

 

நாலாயிர திவ்ய பிரபந்தம் என்னும் திராவிட வேதம்

ஆழ்வார்கள் பற்றி அறிந்து கொள்வோம்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.