பப்பாளி – மருத்துவ பயன்கள்

பப்பாளி

பப்பாளி கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டது. பப்பாளி காய் வயிற்றுப் புழுக்களை அழிக்கும்; தாய்ப் பால் சுரப்பை அதிகமாக்கும்; உடலுக்கு வெப்பத்தைத் தரும். ஆரோக்கியம் தரும்; மாதவிலக்கைத் தூண்டும்; பசியை உண்டாக்கும். Continue reading “பப்பாளி – மருத்துவ பயன்கள்”

நொச்சி – மருத்துவ பயன்கள்

நொச்சி

நொச்சி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையானது. நொச்சி இலை, உடல் அசதியைத் தணிக்கும்; சிறுநீரைப் பெருக்கும்; காய்ச்சலைப் போக்கும்; ஜலதோஷத்தைக் கட்டுப்படுத்தும்; மாதவிலக்கை தூண்டும்; வயிற்றுப் புழுக்களைக் கொல்லும். Continue reading “நொச்சி – மருத்துவ பயன்கள்”

நெல்லிக்காய் – மருத்துவ பயன்கள்

நெல்லக்காய்

நெல்லிக்காய் புளிப்பு, இனிப்பு மற்றும் துவர்ப்புச் சுவைகளைக் கொண்டது; குளிர்ச்சித் தன்மையானது; கண்களுக்குக் குளிர்ச்சி தரும்; செரிமானத்தைக் தூண்டும்; சிறுநீர் பெருக்கும்; குடல் வாயுவை அகற்றும்; பேதியைத் தூண்டும்; உடல்சூடு, எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெள்ளை, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றைக் குணமாக்கும். Continue reading “நெல்லிக்காய் – மருத்துவ பயன்கள்”

நெருஞ்சில் – மருத்துவ பயன்கள்

நெருஞ்சில்

நெருஞ்சில் முழுத்தாவரமும் துவர்ப்பு, இனிப்பு சுவைகளும், சீதத் தன்மையும் கொண்டது. குளிர்ச்சி தரும்; சிறுநீர் எரிச்சலைப் போக்கும்; சிறுநீர் பெருக்கும்; காமம் பெருக்கும்; உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும்; ஆண்மையைப் பெருக்கும்; இரத்தைப்போக்கை கட்டுப்படுத்தும். Continue reading “நெருஞ்சில் – மருத்துவ பயன்கள்”

நாயுருவி – மருத்துவ பயன்கள்

நாயுருவி

நாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது. வெப்பத் தன்மையுடையது. இது, பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும். Continue reading “நாயுருவி – மருத்துவ பயன்கள்”