கோச்சிங் சென்டர் செல்லாமல்

மனித உருவில் கடவுள்! மருத்துவர்கள்!

கடந்த வாரக் கருத்துக் கணிப்பு:

கோச்சிங் சென்டர் செல்லாமல் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும்

இல்லை – 57% (13 வாக்குகள்)

ஆம் – 43% (10 வாக்குகள்)

 

அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள்

அபியும் அக்ஞேயும்
அக்ஞே
அக்ஞே

அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள் அழகானவை. வாசகர்களுக்கு அலாதியான அனுபவம் தருபவை.

தமிழ் கவிஞர் பீ.மு.அபிபுல்லாவும் (B.M. Abibullah),  இந்தி கவிஞர் ச‌ச்சிதானந்த் ஹீரானந்த் வாஸ்த்யாயன் அக்ஞேயும் (Sachithananda Hiranand Vastyayan Agne)  ஒரே வயதினரோ ஒரே காலகட்டத்தைச் சேர்ந்தவர்களோ அல்ல.

எனினும் அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள் ஒருமித்த தன்மை உடையனவாகவும், கவிப்பொருளில் ஒற்றுமை உடையனவாகவும் காணப் பெறுகின்றன. Continue reading “அபியும் அக்ஞேயும் தந்த நூதனக் கவிதைகள்”

ப்ரெண்ட்ஸ் – சிறுகதை

ப்ரெண்ட்ஸ்

மதுரையில் அலுவலக மீட்டிங் முடித்து விட்டு பெரியார் பேருந்து நிலையத்தில், மாட்டுத்தாவணி செல்லும் பேருந்திற்காக அன்றில் காத்திருந்தபோது 22 ஏ பேருந்து வந்தது. பேருந்தில் ஏறி 2-வது சீட்டில் அமர்ந்து மாட்டுதாவணிக்கு டிக்கட் வாங்கினாள்.

கல்லூரியில் பயிலும்போது ஒருநாள் இந்த 22 ஏ பஸ்ஸை பிடிக்க தான் பட்ட கஷ்டங்களையும், அன்றைய நிகழ்வு கற்பித்த பாடமும் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாதவை.

1999-ம் வருடம் நடந்த நிகழ்வுகள் இன்றும் நினைவில் அப்படியே நிற்கின்றன. பழையவைகளை அப்படியே அசைபோட்டாள் அன்றில்.

Continue reading “ப்ரெண்ட்ஸ் – சிறுகதை”

ஆதுர சாலை – ஒரு மருத்துவ ஊழியனின் கதை

ஆதுர சாலை ‍- நூல் விமர்சனம்

ஒரு மருத்துவ ஊழியனின் கதை என்ற வகையில் உமர் பாரூக் அவர்கள் எழுதிய ஆதுர சாலை என்னும் நூல், மருத்துவத் துறையில் உள்ள அனைவரும் படிக்க வேண்டிய முக்கிய நூலாக நான் கருதுகிறேன்.

(ஆதுர சாலை என்றால் மருத்துவமனை என்று பொருள்)

அலோபதி மருத்துவ ஆய்வுக் கூடங்களில் நடக்கும் டெஸ்டிங் மோசடி தில்லுமுல்லுகளையும், சித்த மருத்துவத்தின் முக்கியத்துவத்தையும் பேசும் நாவல் ஆதுர சாலை.

கதையின் ஆரம்பத்திலேயே ‘இந்த நாவல் யார் மனதையும் புண் படுத்தி இருந்தால் உரிய சிகிச்சை எடுத்து கொள்ளவும்’ என ஆசிரியர் அறிவிக்கிறார்.

Continue reading “ஆதுர சாலை – ஒரு மருத்துவ ஊழியனின் கதை”