கடுக்காய்

Kadukkai

என்றும் இளமையோடு வாழ சித்தர் பெருமான் திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. Continue reading “கடுக்காய்”

பட்டாணி சுண்டல் செய்வது எப்படி?

Pattani Sundal

தேவையான பொருட்கள்

காய்ந்த பட்டாணி : 3 கப்
கடுகு : 2 டீஸ்பூன்
பெருங்காயம் : 2 சிட்டிகை
கறிவேப்பிலை : சிறிதளவு
மிளகாய் வற்றல் : 6
தேங்காய்பூ : ¼ மூடி
உப்பு : தேவையானது
எண்ணெய் : 2 டேபிள் ஸ்பூன்

 

செய்முறை

பட்டாணியை முதல்நாள் இரவே ஊறப் போடவும். மறுநாள் சுத்தமாக கழுவி, அதிகம் தண்ணீர் சேர்க்காமல் குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு மிளகாய் வற்றல் போட்டு தாளிக்கவும். அதில் வெந்த பட்டாணியை கொட்டி தேவையான உப்பு போட்டுக் கிளறவும். பெருங்காயம் தூவவும். கறிவேப்பிலையை கிள்ளிப்போட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். சுவையான பட்டாணி சுண்டல் தயார்.

 

கருப்பட்டி இடியாப்பம் செய்வது எப்படி?

Karupatti Idiyappam

தேவையான பொருட்கள்

பச்சரிசி : 600 மி.லி. (இடித்து அவித்து சல்லடையில் சலித்து வைக்கவும்)
கருப்பட்டி : ¼ கிலோ
தண்ணீர் : 400 மி.லி. அல்லது 2 டம்ளர்

 

செய்முறை

கருப்பட்டியைத் தட்டிப்போட்டு தண்ணீர் விட்டு கருப்பட்டி கரைந்து கொதித்ததும் மாவில் வடிகட்டிவிட்டு உடனே நன்றாகப் பிசைந்து மாவு சூடாக இருக்கும் போதே பிழிந்து வேக வைத்து தேங்காய்பூ தூவவும். சுவையான கருப்பட்டி இடியாப்பம் ரெடி!

 

குழாய்ப்புட்டு செய்வது எப்படி?

Kuzhai Puttu

செய்முறை

இடியாப்ப மாவில் சிறிது உப்புத்தண்ணீர் தெளித்து புட்டு மாவு தயார் செய்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை துருவி கொள்ளவும்.

புட்டுக் குழலில் முதலில் தேங்காய்ப்பூவைப் போட்டு அடுத்து ஒரு கை மாவு போட்டு அடுத்து சீனி கொஞ்சம் தூவவும். அடுத்து தேங்காய்ப்பூ தூவவும்.

பழையபடி மாவு, சீனி, தேங்காய்ப்பூ இவ்வாறு குழாயின் மேல் பாகம் வரை நிரப்பி மூடி, கலயத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி குழாயை அதில் பொருத்தி வேக வைக்க வேண்டும்.

மூடியிலுள்ள தூவாரத்தின் வழியாக ஆவி வந்ததும் குழாயை எடுத்து அடிப்பக்கத்திலிருந்து ஒரு குச்சியால் புட்டை வெளியே தள்ளவும். சுவையான குழாய்ப்புட்டு ரெடி!