தமிழ் வேதங்கள் என்றழைக்கப்படும் பன்னிரு திருமுறைகள்

தமிழ் வேதங்கள் என்றழைக்கப்படும் பன்னிரு திருமுறைகள்

பன்னிரு திருமுறைகள் என்பவை சைவத்தின் தலைவனான சிவபெருமானைப் போற்றி பாடிய பன்னிரெண்டு நூல்களின் தொகுப்பாகும்.

முறை என்றால் நல்ல கருத்துக்களைக் கூறி நமது வாழ்வினை நெறிப்படுத்தக் கூடிய நூல் என்பதாகும். திரு என்பதை ‘தெய்வீகம் பொருந்திய’ எனக் கொள்ளலாம். எனவே திருமுறை என்பதற்கு தெய்வீக நூல் என்பது பொருள் ஆகும்.

பெரும்பாலான சிவாலயங்களில் பன்னிரு திருமுறைகள் ஆடலரசனான நடராஜருக்கு அருகில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கபட்டிருக்கும்.

Continue reading “தமிழ் வேதங்கள் என்றழைக்கப்படும் பன்னிரு திருமுறைகள்”

திருநாவுக்கரசரின் நமச்சிவாயப் பதிகம்

சிவன்

சொற்றுணை வேதியன் என்னும் திருநாவுக்கரசரின் நமச்சிவாயப் பதிகம் அச்சங்கள் மற்றும் ஐயங்கள் நீங்கித் தன்னம்பிக்கை வளரப் பாடப்படுகிறது. Continue reading “திருநாவுக்கரசரின் நமச்சிவாயப் பதிகம்”

மார்கழி மாத சிறப்பு

பூக்கோலம்

மார்கழி மாத சிறப்பு பற்றி இக்கட்டுரையில் காணலாம். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என பகவான் கிருஷ்ணர் இம்மாதத்தை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.

இம்மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது வழக்கமாக மேற்கொள்ளப்படுகிறது.

Continue reading “மார்கழி மாத சிறப்பு”

ஐப்பசி மாதம் சிறப்புக்கள்

தீபாவளி

ஐப்பசி மாதம் அடைமழைக் காலம் என்பது பழமொழி. அத்துடன் ஐப்பசி ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் மாதமும் ஆகும். இம்மாதத்திற்கு துலா மாதம் என்ற பெயரும் உண்டு. இம்மாதத்தில் இந்தியாவின் முக்கிய பண்டிகையான தீபாவளி கொண்டாடப்படுகிறது. Continue reading “ஐப்பசி மாதம் சிறப்புக்கள்”

கார்த்திகை மாத சிறப்புக்கள்

கார்த்திகை தீபங்கள்

கார்த்திகை மாத சிறப்புக்கள் பல உள்ளன. கார்த்திகை மாதம் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது கார்த்திகை தீபம் தான். Continue reading “கார்த்திகை மாத சிறப்புக்கள்”