Tag: திட்டச்சேரி மாஸ்டர் பாபு

திட்டச்சேரி மாஸ்டர் பாபு

  • பேசும் ஓவியம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

    பேசும் ஓவியம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

    அதிகாலை நேரம்.

    “டீ, காபி! டீ, காபி! டீ, காபி!”

    “வடை! வடை! வடை! வடை! சூடான வடை!”

    குரலின் சர்ச்சைகளை கேட்டு கண் விழித்தாள் ரோகிணி.

    ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்தாள். இரவு முழுதும் பொழிந்த பனிச்சாரலில் நனைந்த ரோஜாவை போல் அவளின் முகம் மலர்ந்திருந்தது.

    மீனைப் போல் வளைந்த புருவமும், பார்ப்பவரை மறுபடியும் திரும்பி பார்க்க வைக்கும் காந்த விழிகளும் அவளுக்கென்று அழகாய் இருந்தது.

    (மேலும்…)
  • முயல் குட்டியின் தந்திரம் –  திட்டச்சேரி மாஸ்டர் பாபு

    முயல் குட்டியின் தந்திரம் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

    ஒரு காட்டில் ஒரு முயல் குட்டி தன் தாயுடன் சேர்ந்து இரை தேடிக் கொண்டிருந்தது.

    அப்போது அவ்வழியாக வந்த வனத்துறை ஊழியர்களின் ஜீப்பிலிருந்து ஏதோ ஒன்று தவறி விழுவதைக் கண்டது முயல் குட்டி.

    (மேலும்…)
  • அரும்பு மடல் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

    அரும்பு மடல் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

    “வணக்கம் டீச்சர்”

    மைதிலி டீச்சர் கிளாஸ் ரூமில் நுழைந்தார்.

    (மேலும்…)
  • சொர்க்கமே என்றாலும்! – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

    சொர்க்கமே என்றாலும்! – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

    வாய்க்கால் மதகில் ஒரு பெரியவர் உட்கார்ந்து இருந்தார். கையில் சுருட்டு புகைந்து கொண்டு இருந்தது. அருகில் ஒரு தொரட்டு குச்சி இருந்தது.

    அவரை சுற்றி இருந்த வயல்வெளிகளில் சீமைக் கருவேலங்காய்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. ஆடுகளையே உற்று பார்த்துக் கொண்டு தன் மனக்காயங்களை புகை விட்டு ஆற்றிக் கொண்டிருந்தார் தாத்தா.

    (மேலும்…)
  • குமரனின் ஆசையும் விளைவும் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

    குமரனின் ஆசையும் விளைவும் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

    “குமரன் குமரன் எழுந்திருப்பா. இன்னிக்கி உன்னோட விடுதலை நாள். வா! உன்னைய ஜெயிலரையா கூப்பிடுறாரு” என்று ஒரு காவலாளி சொல்லி விட்டுப் போக, பரட்டை தலையும் முகத்தில் காடு போல் மண்டி இருந்த தாடியும் மீசையும் அவன் அழகை மறைத்திருந்தது.

    36 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி கருத்த தேகத்துடன் காவலாளியை பின் தொடர்ந்தான். காலடி சத்தம் கேட்டதும் தன் இருக்கையில் அமர்ந்திருந்த ஜெயிலர் தலையை நிமிர்த்தினார்.

    (மேலும்…)