யார் தவறு? – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

கடற்கரையில் சுந்தரி பூ விற்றுக் கொண்டிருந்தாள். கடற்கரையில் அவள் வயதை ஒட்டிய சிறுவர்கள் தத்தம் தாய் தந்தையருடன் கடல் அலையோடு விளையாடிக் கொண்டிருந்தனர்.

Continue reading “யார் தவறு? – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”

நினைவுகள் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு

2ஏ பூந்தோட்டம் செல்லும் டவுன் பஸ் வந்து நின்றது.

பஸ்ஸின் பின்புறம் வழியாக மீன் கூடைகள் எல்லாம் இறக்கியபின் பூபதியும் கீழே இறங்க, பாபு தன் லோடு சைக்கிளை அருகே கொண்டு வந்தான்.

மீன் கூடையை ஏற்றி வைத்து சைக்கிளை பாபு தள்ள, பூபதி கூடையைப் பிடித்துக் கொண்டதும் இருவரும் நடந்தனர்.

கடைத்தெருவில் தூங்குமூஞ்சி மரத்தடி வந்ததும் பூபதி மீன் கூடையை இறக்கி வைத்த போது ஊரிலிருந்த பெரியவீட்டுப் பெண்கள் சுற்றி வளைத்தனர்.

பாபு சைக்கிளை ஸ்டாண்ட் செய்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

Continue reading “நினைவுகள் – திட்டச்சேரி மாஸ்டர் பாபு”

கடமை – கதை

கடமை - கதை

“என்னடா, சேத்தான் நம்ம பொழப்பு இப்படியே போய்கிட்டு இருக்குது. ஒரு பொழப்பையும் காணும். காலையில எந்திரிச்சு கடை தெரு பக்கம் வந்தா ஒரு பயலும் ஒரு பொழப்பும் தர மாட்டேன்றானுங்க.” என்று கேட்டான் பாபு.

Continue reading “கடமை – கதை”

பதட்டப் படாதே – சிறுகதை

நள்ளிரவு ஒரு மணி இருக்கும். கரண்ட் கட் ஆனதும் உடல் வேர்வையால் நனைய, தூங்கிக் கொண்டிருந்த பிரதீப் கண் விழித்தான்.

எங்கு பார்த்தாலும் ஒரே இருட்டு. ‘என்ன இது? எல்லாம் இருட்டாக தெரிகிறது. கண்ணை மூடி இருக்கிறோமா! திறந்து இருக்கிறோமா?’ தன் கண்ணை தன்னாலேயே நம்ப முடியவில்லை. தொட்டுப் பார்த்துக் கொண்டான்.

‘கண் திறந்து தான் இருக்கிறது. அப்போ ஏன் பார்க்க முடியவில்லை? என்ன நடக்கிறது இங்கே?’ கண்களை கசக்கி கொண்டவனுக்கு எதிரே ஏதோ அசைவது போல் தோன்றியது.

அதையே உற்று பார்த்துக் கொண்டிருந்தான். எழுந்திருக்கவும் பயம். உடம்பெல்லாம் சில்லுற்று போனது. ‘சரக் சரக்’ என்று சத்தம் வேறு.

Continue reading “பதட்டப் படாதே – சிறுகதை”

கற்க தவறிய காதல் – கதை

என் பெயர் நாகராஜ். நான் பொதுவாகவே எல்லோரிடமும் சகஜமாக பழகி விடுவேன். அதனாலே என்னவோ எனக்கு நண்பர்கள் வட்டாரம் அதிகம்.

Continue reading “கற்க தவறிய காதல் – கதை”