உன்னதமான(ண)வன் – படிப்பது எப்படி? – பாகம் 10

ஒரு வகுப்பறையில் மாணவர்கள் ஒருத்தர் ஒருத்தருடன் பேசிக்கொண்டு சந்தைக் கடை வீதி போல சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள்.

பக்கத்து வகுப்பறை ஆசிரியருக்கு அது வெகுவான கோபத்தினை ஏற்படுத்தியது. இந்த வகுப்பறைக்குள் வந்த அவர் மாணவர்களைக் கடிந்து கொண்டார். மேலும் இந்த மாணவர்களின் கணித ஆசிரியர்தான் அவர்.

மாணவர்களை அமைதியாக இருக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் மாணவர்க‌ளிடம் “அமைதி! அமைதி! இங்கே பாருங்கள். நான் உங்களுக்கு ஒரு கூட்டல் கணக்கு தருகிறேன். அமைதியாக அதனைச் செய்து விடையினை பக்கத்து அறையில் வகுப்பெடுத்துக் கொண்டிருக்கும் என்னிடம் வந்து காட்ட வேண்டும்” எனக் கூறி ஒரு கூட்டல் கணக்கினை மாணவர்களிடம் அறிவித்தார்.

Continue reading “உன்னதமான(ண)வன் – படிப்பது எப்படி? – பாகம் 10”

விளையும் பயிர் – படிப்பது எப்படி? – பாகம் 9

விளையும் பயிர்

உற்று நோக்குபவர் கற்றுக்கொள்கிறார் என்று சென்ற கட்டுரையில் பார்த்தோம். கற்றுக்கொள்பவர் உற்று நோக்குவது இருக்கட்டும்!

கற்பிப்பவரும் தன்னிடம் ஆர்வமுடன் கல்வி கற்கவரும் மாணவரை உற்று நோக்க வேண்டும் அப்படியானால்தான் விளையும் பயிர் எது என்பதனை அதன் முளையிலே கண்டறிய முடியும்.

வகுப்பறையில் ஆசிரியர் கற்றுக் கொடுப்பதனை மாணவ மாணவியர் கற்றுக் கொள்கிறார்கள் என்பார்கள்.

இன்றைய தினம் மாணவ மாணவியர் வகுப்பறையில் ஆசிரியரிடம் பாட சம்பந்தமாக சந்தேகங்கள் எழுப்புவது மற்றும் கேள்வி கேட்பது என்பது அரிதான விஷயமாக மாறிவிட்டது.

வகுப்பறை என்பது ஒரு வழிப் போக்குவரத்து போல நமது நாட்டில் மாறிவிட்டது என்பதனை நம்மால் மறுக்க முடியாது.

Continue reading “விளையும் பயிர் – படிப்பது எப்படி? – பாகம் 9”

உற்று நோக்கு – படிப்பது எப்படி? – பாகம் 8

உற்று நோக்கு

உற்று நோக்கு. அஃது உயர்வுக்கு உறுதுணை.

எந்த ஒரு செயலையும் மேம்போக்காகச் செய்யாமல் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்தால், அது மிகப்பெரிய பலன்களை நமக்குக் கொடுக்கும் என்பது குறித்து சென்ற கட்டுரையில் பார்த்தோம்.

நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை உற்றுக் கவனித்தால் அது நமக்குப் பல பாடங்களைக் கற்றுக் கொடுக்கும். அதற்கு இதோ இரண்டு அருமையான நிகழ்ச்சிகள்.

Continue reading “உற்று நோக்கு – படிப்பது எப்படி? – பாகம் 8”

உருப்படியாய் உயர‌ – படிப்பது எப்படி?- பாகம் 7

எங்கள் கல்லூரி சார்பாக வருடா வருடம் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பில் சிறப்பாக படிக்கும் மாணவச் செல்வங்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்துவது வழக்கம்.

நான் வேலைக்குப் புதிதாக சேர்ந்த காலம் அது. அப்போது பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளில் சேர மாணவ மாணவியருக்கு மாநில அரசே நுழைவுத்தேர்வு நடத்தும் முறை இருந்தது.

Continue reading “உருப்படியாய் உயர‌ – படிப்பது எப்படி?- பாகம் 7”

இன்னும் கொஞ்சம் படி – படிப்பது எப்படி?- பாகம் 6

இன்னும் கொஞ்சம் படி

என்ன சார், நீங்க படிக்க ஆரம்பிக்கச் சொன்னீங்க!

எதையெதையோ தள்ளுபடி பண்ணச் சொன்னீங்க!

படி அப்படின்னு சொன்னீங்க!

அப்புறம் மறுபடியும் படியென்று சொன்னீங்க!

இப்ப என்னன்னா இன்னும் கொஞ்சம் படி எனத் தலைப்பு போடுறீங்க!

இப்படி படி! படி! என்று சொல்லிச் சொல்லி, திரும்பத் திரும்ப நீங்கள் ஆசிரியர் என்பதனை எங்களுக்கு நிரூபித்துக் கொண்டு இருக்கின்றீர்கள் என நீங்கள் நினைப்பது எனக்குத் தெரியும்.

Continue reading “இன்னும் கொஞ்சம் படி – படிப்பது எப்படி?- பாகம் 6”