கசக்கும் பலா – சிறுகதை

கசக்கும் பலா

மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் அந்தக் கடைவீதியில் போவோர், வருவோரிடமெல்லாம் கையேந்தி பிச்சை கேட்பவர்களின் மத்தியில் வித்தியாசமான ஒருவன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்ததை கொஞ்ச நாட்களாகக் கவனித்துக் கொண்டிருந்தான் பிரகாஷ்.

அன்று அலுவலகம் சென்று கொண்டிருந்த சமயம் தன்னிடம் பிச்சை கேட்டு கையேந்திய அவனிடம் பிரகாஷ், “உனக்கு என்னப்பா குறைச்சல்? கை, கால் எல்லாம் நல்லாதானே இருக்கு? இந்த வயசில உழைச்சு சம்பாதிக்க வேண்டிய நீ, இப்படி பிச்சை எடுக்கிறயே, உனக்கே இது நியாயமாப்படுதா?”

Continue reading “கசக்கும் பலா – சிறுகதை”

உயிர்மேல் ஆசை – சிறுகதை

உயிர்மேல் ஆசை - சிறுகதை

“செய்யுங்க, வேண்டாம்னு சொல்லலே. அகலக்கால் வைக்காதீங்க. பெரிய ஸ்பெஷலிஸ்ட், கிளினிக்கெல்லாம் தேவையா? ஜி.எச்-ல அட்மிட் பண்ணி பார்த்துக்கிட்டா பத்தாதா?”

“என்ன மீரா, இப்படிப் பேசறே? நாளைக்கு அவருக்கு ஏதாவது ஒண்ணு ஆச்சுன்னா மூத்தவனாய் இருந்துக்கிட்டு நான்தான் சரியா கவனிக்கலேன்னு எல்லாரும் பேசமாட்டாங்களா?”

“நீங்க மட்டும்தான் அவருக்குப் பிள்ளையா? உங்ககூடப் பிறந்தவங்க ரெண்டுபேர் இருக்காங்க.

Continue reading “உயிர்மேல் ஆசை – சிறுகதை”

ஆஸ்பெஸ்டாஸ் – தீ எதிர்ப்பு சாதனம்

ஆஸ்பெஸ்டாஸ்

தீ பற்றிக் கொள்ளும் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிடும். ஆனால் தீ பற்றிக் கொள்ளாத ஒரு பொருள் ‘ஆஸ்பெஸ்டாஸ்’.

அதனால்தான் தீயணைப்புத்துறை ஊழியர்களின் உடை, ஷூக்கள், கையுறை, தலைக்கவசம் (ஹெல்மெட்) போன்றவை ஆஸ்பெஸ்டாஸ் மூலம் தயாரிக்கப்படுகின்றன.

‘ஆஸ்பெஸ்டாஸ்’ என்பது கிரேக்கச் சொல். ஆஸ்பெஸ்டாஸ் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பொருளல்ல.

Continue reading “ஆஸ்பெஸ்டாஸ் – தீ எதிர்ப்பு சாதனம்”

நான் ஓர் அடிமை

பழக்கங்கள் மனிதனுக்கு அடிமையாக வேண்டும் என்பது போய்,

மனிதன் பழக்கங்களுக்கு அடிமையாகி விட்டான்.

நல்லதோ, கெட்டதோ – அடிமை என்றால் அடிமை தான்!

நான் மட்டும் விதிவிலக்கா?

ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி விடும்

மனிதர்களின் வரிசையில் நானும் தான்!

Continue reading “நான் ஓர் அடிமை”

குடை – சிறுகதை

குடை

இப்போதே மணி ஆறரை. நன்றாக இருட்டி விட்டது.

சோதனை போல டோல்கேட் பஸ் இன்னும் வந்தபாடில்லை. தடுக்கி விழுந்தால் ஏர்போர்ட், டோல்கேட் பஸ் மீதுதான் விழ வேண்டியிருக்கும்.

இப்போதுள்ள நிலைமையோ தலைகீழ். நம் அவசரத்திற்கு ரொம்ப எதிர்பார்க்கும்போது தான் இப்படி காலை வாரிவிடும்.

Continue reading “குடை – சிறுகதை”