தம்மபதம் – புத்த சமய அற நூல்

தம்மபதம்

தம்மபதம் என்ற பொக்கிசத்தை நான் நீண்ட தேடலுக்குப் பின்னே கண்டு கொண்டேன்.

எழுபதுகளில் குமரி மாவட்டத் தமிழ்ச் சங்கம், பேராசிரியர் ஆபிரகாம் அருளப்பனார் தலைமையில், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகில், சனிக்கிழமைகளில் கூடும்.

கல்லூரி மாணவனான நான் தவறாமல் அதில் கலந்து கொள்வேன். அங்கு வருவோரில் நான் தான் மிக இளையவனாக இருப்பேன். ஐயங்கள் கேட்பேன்; தெளிவான பதிலைப் பெறுவேன்.

ஒருநாள் ஒருவர் ‘தம்ம பதமும் திருக்குறளும்’ என்று ஓர் ஆய்வுக் கட்டுரை வாசித்தளித்தார். அதுவரை தம்மபதம் என்ற நூலைப் பற்றி நான் கேள்விபட்டதேயில்லை.

Continue reading “தம்மபதம் – புத்த சமய அற நூல்”

பூஜ்ஜியம் வழங்கிய ராஜ்ஜியம்

பூஜ்ஜியம்

இந்தியாதான் பூஜ்ஜியம் வழங்கிய ராஜ்ஜியம். கணித சாஸ்திரத்தில் கிரேக்கமும், இந்தியாவும் உலகிற்கு வழங்கிய நன்கொடைகள் ஏராளம்.

இந்திய வரலாற்றில் பழங்காலத்திலேயே ஆரிய பட்டரும், பிரம்ம குப்தரும், பாஸ்கரரும், புதையனாரும் இன்றைய கணித மேதைகளுக்கு வியப்பைத் தருகின்ற அளவிற்குப் பல்வேறு கணக்கீட்டு முறைகளையும், சூத்திரங்களையும், ஆய்ந்தவர்கள். Continue reading “பூஜ்ஜியம் வழங்கிய ராஜ்ஜியம்”

ஒளரங்கசீப் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்

ஒளரங்கசீப்

வரலாற்றில் இடம் பெற்ற புகழ்பெற்ற கடிதங்களில் ஒளரங்கசீப் தன் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் மிக முதன்மையானது. ஆசிரியர்கள் இன்றியமையாது படிக்க வேண்டியது; கல்வியியல் பாடத்திட்டத்தில் இடம்பெற வேண்டியது. Continue reading “ஒளரங்கசீப் ஆசிரியருக்கு எழுதிய கடிதம்”

பாசம் தேடும் நவீன தசரதர்கள்

நவீன தசரதர்கள்

பரிணாம வளர்ச்சியில் பாசம் குறைகிறதா? நான் சிறுவனாக இருக்கும் பொழுது ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் எங்கள் வீட்டில் பசுமாடுகள் இருந்தன.

அதிகாலை நான்கு மணி அளவில் அம்மா பால்கறக்கும் பொழுது, நுரை தள்ளிய பாலில் பீச்சப் படும் அந்த ஒலி, அந்த நாத இனிமை, என் அடிமனதில் ஆழப் பதிந்திருக்கிறது. Continue reading “பாசம் தேடும் நவீன தசரதர்கள்”

மெக்காலே திட்டம்

மெக்காலே

பாரத நாட்டை வெற்றி கொள்ள என்ன தந்திரம் மெற்கொள்ள வேண்டும் என 1835 பிப்ரவரி 2-ம் தேதி இங்கிலாந்தின் நாடாளுமன்றத்தில் மெக்காலே வைத்த திட்டம் இதுதான். Continue reading “மெக்காலே திட்டம்”