சொர்க்க வனம் 10 ‍- நண்பர்களின் உரையாடல்

நண்பர்களின் உரையாடல்

அன்று மாலை ஆறு மணிக்கு…

வெளிச்சம் மங்கியிருந்தது. சொன்னபடியே, பூங்குருவி கூட்டத்தின் தலைவன் ரெட்விங், ஸ்வாலோ குருவிகள் தங்கியிருந்த மரத்தை வந்தடைந்தது. ரெட்விங்குடன் அதன் மூன்று நண்பர்களும் வந்திருந்தன.

அங்கு, வாக்டெய்ல் தனது புத்தகத்தில் பயண அனுபவங்களைப் பற்றி குறிப்பு எழுதிக் கொண்டிருந்தது. Continue reading “சொர்க்க வனம் 10 ‍- நண்பர்களின் உரையாடல்”

சொர்க்க வனம் 9 ‍- நண்பனை சந்தித்த இருன்டினிடே

நண்பனை சந்தித்த இருன்டினிடே

பகலில் ஓய்வு, இரவில் பயணம் என ஸ்வாலோ இன குருவிக்கூட்டம் மேலும் நான்கு நாட்கள், பயணத்தை தொடர்ந்தது.

அப்பொழுது, குடியிருப்புகள், கோபுரங்கள், வாகனங்கள், பாலங்கள், நெடுஞ்சாலைகள் என மனிதனின் பிரம்மாண்ட படைப்புகளை கண்டு அவை வியந்தபடியே பயணித்தன. Continue reading “சொர்க்க வனம் 9 ‍- நண்பனை சந்தித்த இருன்டினிடே”

சொர்க்க வனம் 6 – வாக்டெய்லுக்கு கிடைத்த நட்பு

வாக்டெய்லுக்கு கிடைத்த நட்பு

குருவிகள் எல்லாம் வந்த வழியே மீண்டும் பயணித்துக் கொண்டிருந்தன.

சுமார் இரண்டு மணி நேரப் பயணத்திற்குப் பின்பு மீண்டும் அந்த மனித குடியிருப்புகள் தென்பட்ட பகுதியினை வந்தடைந்தது குருவிக் கூட்டம்.

“அந்த ஏரி எங்காவது தென்படுகிறதா?” என இருன்டினிடே கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தது. மற்ற குருவிகளும் அவ்வாறே ஏரியை தேடிக் கொண்டிருந்தன. Continue reading “சொர்க்க வனம் 6 – வாக்டெய்லுக்கு கிடைத்த நட்பு”

அமைதி வேண்டும் உலகிலே

அமைதி வேண்டும் உலகிலே

அமைதி வேண்டும் உலகிலே – இதுதான் பெரும்பான்மையான மக்களின் விருப்பமாக உள்ளது.

இன்றைக்கு இந்தியாவும் சீனாவும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு இருக்கின்றனர். அமெரிக்காவும், சீனாவும் அப்படித்தான்.

இந்த காலகட்டத்தில், சீனாவுடன் போர் என்பது எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வாக இருக்கலாம் என சில இந்தியர்கள் நினைக்கலாம். Continue reading “அமைதி வேண்டும் உலகிலே”

சேரும் இடம் அறிந்து சேர்

சேரும் இடம் அறிந்து சேர்

நாம் யாருடனும் நட்புக் கொள்ளும்போது அவர்களின் குணநலன்கள் அறிந்து நட்புக் கொள்ள வேண்டும் என்பதை சேரும் இடம் அறிந்து சேர் என்ற இக்கதை மூலம் அறிந்து கொள்ளலாம்.

பச்சை வனம் என்ற காட்டில் குரங்கு குப்புசாமி வசித்து வந்தது. அது சோம்பேறி. ஆனால் எப்போதும் எல்லோரையும் ஏமாற்றி காரியத்தைச் சாதித்துக் கொள்வதில் வல்லது. Continue reading “சேரும் இடம் அறிந்து சேர்”