கால்பந்தாட்டத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்

‘கால் பந்தாட்டம்’ என்பது இரு கோஷ்டிகளாக, ஒவ்வொன்றிலும் பதினோரு விளையாட்டு வீரர்களைக் கொண்டு நீண்ட சதுர மைதானத்தில் ஆடப்படும் ஓர் ஆட்டம்.

மைதானத்தின் இரு மூலைகளிலும் ‘கோல் கம்பம்’ (Goal Post) அமைக்கப்பட்டு காலால் உதைக்கப்படும் பந்தை ஒருவருக்கொருவர் எதிரணியின் கம்பத்திற்குள் நுழைக்க உற்சாகத்துடன், உத்வேகத்துடன் ஆடி, வெற்றி வாகை சூட முயல்வர்.

Continue reading “கால்பந்தாட்டத்தின் கதை – ஜானகி எஸ்.ராஜ்”

தாய்ப்பாலின் மகத்துவம் – ஜானகி எஸ்.ராஜ்

குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைவிட மிகச்சிறந்த ஓர் உணவு இருக்க முடியாது. அதிக சத்து மிகுந்த பாலாக தாய்ப்பால் இருப்பதால் நோய்கள் அணுகாதபடி அது குழந்தைகளைப் பாதுகாக்கிறது.

தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகள் உடலால் மட்டுமின்றி உள்ளத்தாலும் ஆரோக்கியமாக இருக்கும். பாட்டில் பாலை விட தாய்ப்பால் சத்துமிக்க சிறந்த உணவு என மருத்துவரீதியாகவும், பரிசோதனை வாயிலாகவும் இதர ஆய்வுகளாலும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

Continue reading “தாய்ப்பாலின் மகத்துவம் – ஜானகி எஸ்.ராஜ்”

தலைவலியை குணமாக்கும் இஞ்சி – ஜானகி எஸ்.ராஜ்

இஞ்சி ஒரு லவங்கப் பொருள் மட்டுமின்றி, வேருடன் கூடிய காய்கறி வகையைச் சேர்ந்தது என்றும் கூறலாம். இஞ்சி பூமிக்கு அடியில் விளையக் கூடியது.

முதன்முதலாக இந்தியாவிலும், பிறகு சீனாவிலும் இஞ்சி பயிரிடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இஞ்சியைப் பற்றிய மருத்துவக் குறிப்புகள் சமஸ்கிருத இலக்கியத்திலும் சீன மருத்துவக் கட்டுரைகளிலும் நிறையவே இடம் பெற்றுள்ளன.

Continue reading “தலைவலியை குணமாக்கும் இஞ்சி – ஜானகி எஸ்.ராஜ்”

ரத்த அழுத்தம் – ஒர் பார்வை – ஜானகி எஸ்.ராஜ்

நம் உடலிலுள்ள செல்களுக்கு உணவையும் பிராணவாயுவையும் எடுத்துச் செல்ல ஒருகுறிப்பிட்ட வேகத்தில் உடல் முழுவதும் ரத்தம் ஓடுவதைத்தான் ரத்த அழுத்தம் என்கிறோம்.

இதயத்திலிருந்து தான் ரத்தம் எடுத்துச் செல்லப்படுவதால் இதயத்தின் பீச்சும் செயல்தான் இந்த ரத்தத்தின் வேகத்தை உருவாக்கி, இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களில் சீராக ஓட வைக்கிறது.

Continue reading “ரத்த அழுத்தம் – ஒர் பார்வை – ஜானகி எஸ்.ராஜ்”