ஆசிரியர் பணி – மகிழ்ச்சி – ‍ஆரோக்கியம் – அறிவு

ஆசிரியர்

ஆசிரியர் பணி என்பது என்ன‌?

மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், அறிவை கூர்மையாக வைத்துக் கொள்ளவும் கல்வி வழிவகுக்க வேண்டும்.

இம்மூன்றையும் ஒருங்கிணைத்து மாணவர்களின் வளர்ச்சிக்கு வழிகாட்டுவதே ஆசிரியர் பணி என்பதனை ஆசிரியர்கள் உணர வேண்டும். அரசும் உணர்த்த வேண்டும். Continue reading “ஆசிரியர் பணி – மகிழ்ச்சி – ‍ஆரோக்கியம் – அறிவு”

கல்லூரி எதற்கு?

கல்லூரி

1971ஆம் வருடம் ஜூன் மாதம் பி.யூ.சி.யின் மதிப்பெண் பட்டியலையும், முதல் மாணவன்  என்ற சான்றிதழையும் பெற்றுக் கொண்டு தே.தி.இந்துக் கல்லூரி சென்றேன்.

விண்ணப்பப் படிவத்தைப் பெற்று முறைப்படி நிரப்பி அலுவலகத்தில் இணைப்புகளுடன் கொடுத்தேன். மதிய உணவிற்குப் பின் கல்லூரி முதல்வரைப் பார்க்க என்னிடம் கூறப்பட்டது. Continue reading “கல்லூரி எதற்கு?”

விருதுநகர் மாவட்டம் சிறப்புகள்

Ramana Maharishi

விருதுநகர் மாவட்டம் தன் பெயரை போலவே விருதுபெறும் வகையில் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

1.ரமண மகரிஷி அவதரித்த இடம் (திருச்சுழி)

2.தமிழக முதல்வர்களை தந்த மாவட்டம்  (குமாரசாமி ராஜா, காமராஜர்) Continue reading “விருதுநகர் மாவட்டம் சிறப்புகள்”

ஏன் இன்ஜினியரிங் படிக்கனும்?

ssec

நடந்து முடிந்த கல்வி மன்ற தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த இன்ஜினியரிங் படிப்பு படு தோல்வி அடைந்தது. எதிர் கட்சியாக இருந்த கலை மற்றும் அறிவியல் படிப்பு பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வெற்று பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

Continue reading “ஏன் இன்ஜினியரிங் படிக்கனும்?”

தம்மபதம் – புத்த சமய அற நூல்

தம்மபதம்

தம்மபதம் என்ற பொக்கிசத்தை நான் நீண்ட தேடலுக்குப் பின்னே கண்டு கொண்டேன்.

எழுபதுகளில் குமரி மாவட்டத் தமிழ்ச் சங்கம், பேராசிரியர் ஆபிரகாம் அருளப்பனார் தலைமையில், நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு அருகில், சனிக்கிழமைகளில் கூடும்.

கல்லூரி மாணவனான நான் தவறாமல் அதில் கலந்து கொள்வேன். அங்கு வருவோரில் நான் தான் மிக இளையவனாக இருப்பேன். ஐயங்கள் கேட்பேன்; தெளிவான பதிலைப் பெறுவேன்.

ஒருநாள் ஒருவர் ‘தம்ம பதமும் திருக்குறளும்’ என்று ஓர் ஆய்வுக் கட்டுரை வாசித்தளித்தார். அதுவரை தம்மபதம் என்ற நூலைப் பற்றி நான் கேள்விபட்டதேயில்லை.

Continue reading “தம்மபதம் – புத்த சமய அற நூல்”